MARC காட்சி

Back
அதியமான் கோட்டை
110 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம்
245 : _ _ |a அதியமான் கோட்டை -
346 : _ _ |a 1981, 1982
347 : _ _ |a கறுப்பு சிவப்பு மட்கலன்கள், கறுப்பு மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள், சிவப்பு மட்கலன்கள், காவிக்கலவை பூசப்பட்ட மட்கலன், சொரசொரப்பான சிவப்புமட்கலன்கள், சுடுமண் பொம்மைகள், பல்வகை அரிய கல்லினால் செய்யப்பட்டமணிகள், வளையல்கள், சங்குப்பொருள்கள் வளையல்கள், சங்கு, கண்ணாடி, செம்பு, சுடுமண்ணாலான காதணிகள்,சுடுமண் பொம்மைகளுள் குறிப்பிடத்தக்கவை ஒரு பெண்ணின் தலைப்பகுதியும், பெண்ணின்கால், பெண் தெய்வம் ஒன்றின் தலையும், அனுமன் உருவமும், தவழ்கின்ற பாலகிருஷ்ணன் சுடுமண்பொம்மையும், விலங்கின உருவமும், மாவுக்கல்லால் ஆன பிள்ளையார், சுடுமண் விளக்குகள், செம்பு விளக்கு, மாவுக்கல்லாலான விளக்கு, கல்சட்டி, விளையாட்டுப் பொருள்கள் போன்றவைகளும், இரும்புப் பொருள்கள், காசுகள் சிலவும்கிடைத்தன. குதிரை ஒன்றின் தாடை எலும்பும் பிற எலும்புகளும் அதியமான்கோட்டைகுழி 2-இல் கண்டுபிடிக்கப்பட்டன.
500 : _ _ |a சிறப்புமிக்க அதியமான்கோட்டை , தகடூருடன் தொடர்பு கொண்டிருந்ததா என்பதை அறியவும் மற்றும் இப்பகுதியின் தொன்மையை அறியவும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையினர், பேராசிரியர் K.V.இராமன்தலைமையில் 1981,1982-ஆண்டுகளின் இருபருவங்களில்அகழாய்வுகளை மேற்கொண்டது. இவ்வகழாய்வுகளில் மொத்தம் 5 குழிகள் ஊர்ப்பகுதியிலும் கோட்டையின் வரலாற்றை அறிய கோட்டை மேட்டில் 1 குழியும் சிறிய அளவில் தோண்டப்பட்டன. இவ்வூரின் மண்மேட்டுப் பகுதியிலும் கோட்டைப் பகுதியிலும் மட்கல ஓடுகளும் சோழர் கால நாணயம் ஒன்றும் அக்காலத்திய கூரை ஓடுகளும் களஆய்வின் பொழுது கண்டெடுக்கப்பட்டன. 1981-ஆம் ஆண்டில் இவ்வூரின் தென்அக்ரஹாரத் தெருவில் அகழாய்வுக்குழி ஒன்று போடப்பட்டது. பின்னர் 1982-இல் 5 குழிகள் அகழப்பட்டன. அவைஅதியமான்கோட்டை 1, 1அ, 2,3,4,5 எனப்பெயரிடப்பட்டன. தென்அக்ரஹாரத் தெருவின் காலிமனையில் 3 குழிகளும் இதன் எதிர்வரிசை தெலுங்கு அக்ரஹாரத் தெருவின் காலிமனைப் பகுதியில் 1 குழியும் ஊருக்கும் சேலம் – தருமபுரி சாலைக்கும் இடையில் சோமேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் இருப்புப்பாதையை ஒட்டியவாறு 1 குழியும் தோண்டப்பட்டன. அதியமான்கோட்டைகுழி -1: இக்குழி 7x4 மீ. அளவினைஉடையது. இது 4மீஆழத்திற்குதோண்டப்பட்டது. இக்குழியில் 13 மண்ணடுக்குகளும் 22 தோண்டுகுழிகளும்காணப்பட்டன. அதியமான் கோட்டை குழி - 1அ: 4x2 மீஅளவில்தோண்டப்பட்டஇக்குழிஅகழாய்வுக்குழி 1 இன் தொடர்ச்சியாகும். 1இல் கிடைத்த கட்டடப் பகுதியின் முழுமையை அறிய இக்குழி அகழப்பட்டது. இக்குழியில் 14 மண்ணடுக்குகளும் 19 தோண்டு குழிகளும் காணப்பட்டன. அதியமான்கோட்டைகுழி – 2: இக்குழியின் அளவு 5x3மீ. 3.50மீ. ஆழம் வரை தோண்டப்பட்ட இக்குழியில் 17 மண்ணடுக்குகளும் 31 தோண்டு குழிகளும்உள்ளன. அதியமான்கோட்டைகுழி – 3: தெலுங்கு அக்ரஹாரத் தெருவில் காலிமனையில் தோண்டப்பட்ட இக்குழி 7x4 மீ. அளவினைஉடையது. இக்குழியின்ஆழம் 4.30 மீஇக்குழியில் 17 மண்ணடுக்குகளும் 30 தோண்டு குழிகளும் 4 குப்பை கொட்டில்களும் (Dump) இருந்தன. அதியமான்கோட்டைகுழி-4: இக்குழி 7x4 மீ. அளவினைஉடையது. 2.50மீ. ஆழமுடைய இக்குழியில் 8 மண்ணடுக்குகளும் 6 தோண்டு குழிகளும் 3 குப்பைக் கொட்டில்களும் காணப்பட்டன. அதியமான்கோட்டைகுழி – 5: கோட்டையின் காலத்தை அறிய குறுக்கு வெட்டில் 14x2 மீ. அளவிற்கு இக்குழி கோட்டையில் தோண்டப்பட்டது. இக்குழியில் 7 மண்ணடுக்குகள் காணப்பட்டன. இவ்வகழாய்வில் கட்டடப்பகுதி ஒன்று வெளிப்பட்டது. அகழாய்வுக்குழி 1ல் வெளிப்பட்ட இக்கட்டடப்பகுதி நீண்டிருந்தது. வடக்கிலிருந்து தெற்காகச் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கட்டடப் பகுதியின் முழுத்தன்மையை அறிய இதற்கருகில் மற்றொரு குழி அகழ்வு செய்யப்பட்டது. இக்கட்டடம் இடைக்காலம் அல்லது சோழர் காலத்தைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். வீட்டின் தரைப்பகுதிகளும் இங்கு வெளிப்பட்டன. அதியமான்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்களின் அடிப்படையிலும் மண்ணடுக்காய்வின் அடிப்படையிலும் இங்கு மூன்று பண்பாட்டுக் காலங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர். முதலாம் பண்பாட்டில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மக்களும் அதை அடுத்த வரலாற்றுத் தொடக்ககால மக்களும் வாழ்ந்துள்ளனர். இதன்காலம் கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை ஆகும். இரண்டாவது பண்பாட்டுக் காலத்தில் இடைக்காலத்தின் தொடக்ககட்ட மக்கள் வாழ்ந்துள்ளனர். இக்காலத்தில் கட்டடப்பகுதி ஒன்று அகழாய்வில் வெளிப்பட்டது. இதே போன்ற கட்டடப்பகுதி சோழர் காலத்தைச் சேர்ந்த கங்கைகொண்ட சோழபுரம் அகாழய்விலும் வெளிப்பட்டது. இரண்டாம் பண்பாட்டின்காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரை ஆகும். இடைக்காலத்தின் பிற்பகுதி மக்களும் தொடர்ச்சியாக இப்பண்பாட்டு காலத்தில் வாழ்ந்துள்ளனர். இக்காலகட்டத்தில் சொரசொரப்பான சிவப்பு மட்கலன்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு முதல்கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரை ஆகும். சிறிய அளவில் நடத்தப்பட்ட அகழாய்வானாலும் அதியமான் கோட்டையில் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு முதல் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது அறிய முடிகிறது. தகடூரின் (தருமபுரி) அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான்கோட்டை மக்களின் வாழ்விடப் பகுதியாக பல நூற்றாண்டுகள் இருந்துள்ளமை இவ்வகழாய்வு மூலம் தெரியவருகிறது. இங்குள்ள மண்கோட்டை கி.பி. 12-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது என்றும் அகழாய்வின் மூலம் தெரிய வந்தது.
510 : _ _ |a தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள் [Archaelogical Excavations in Tamilnadu], சு. இராசவேலு, கோ. திருமூர்த்தி, பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
520 : _ _ |a அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரும் சங்ககாலத்தில் தகடூர் என அழைக்கப்பட்ட நகரான தருமபுரியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டையாகும். அவ்வூரும் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இக்கோட்டையில் காலபைரவர் கோயில், சோமேசுவரர் கோயில், சென்னராயப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. வழிவழியாக அதியமான் கோட்டை இருந்த இடமாக கூறப்பட்ட இடத்தில் 1981, 1982 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்ககாலத்ததாக கருதப்படும் கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள், வில் அம்பு போன்ற கீறல்கள் உள்ள பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் சுடுமண் மணிகள், இரும்பு ஆணிகள், போன்றவையும் கிடைத்தன. இங்கு மேடையுடன் கூடிய கெட்டியான களிமண்ணால் அமைக்கப்பட்ட தரைப் பகுதியும் கண்டறியப்பட்டது. இவற்றின் காலம் கி.மு.100 முதல் 300வரையிலான காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் சங்க காலத்தில் இருந்து கோட்டை இருந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை. இங்குள்ள கோயில் கல்வெட்டுகளில் இந்த ஊர் மகேந்திர மங்கலம் என்றும் இவ்வூர் இறைவன் மயிந்தீசுவரமுடையார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி முட்டை வடிவிலான கோட்டையின் எஞ்சிய பகுதியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் இக்கோட்டை கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன்படி பார்த்தால் பிற்கால சோழர் காலத்தில் இங்கிருந்து ஆண்டு வந்த இராசராச அதியமான் என்னும் அதியமான் மரபின் சிற்றரசன் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
653 : _ _ |a அகழாய்வு, தமிழ்நாடு, தமிழ்நாட்டுத் தொல்லியல் இடங்கள், தொல்லியல், அகழாய்வு இடங்கள், அதியமான் கோட்டை, தருமபுரி, தர்மபுரி, தகடூர், அதியமான், கோட்டை அகழாய்வுகள், சென்னைப் பல்கலைக்கழகம்
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம்
710 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம்
752 : _ _ |a அதியமான் கோட்டை |c அதியமான் கோட்டை |d தருமபுரி |f தருமபுரி
906 : _ _ |a பெருங்கற்காலம், சங்ககாலம், வரலாற்றுக்காலம்
914 : _ _ |a 78.121876615423
915 : _ _ |a 12.077581059739
995 : _ _ |a TVA_EXC_00049
barcode : TVA_EXC_00049
book category : வரலாற்றுக்காலம்
cover images TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0001.jpg :
Primary File :

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0001.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0002.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0003.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0004.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0005.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0006.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0007.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0008.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0009.jpg

TVA_EXC_00049/TVA_EXC_00049_தருமபுரி_அதியமான்-கோட்டை_அகழாய்வு-0010.jpg